“டிமான்ட்டி காலனி 3” படத்தின் முதல்காட்சி வெளியீடு

Share

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து ‘டிமான்ட்டி காலனி ‘ படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி , பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

தற்போது இதன் 3-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல்காட்சி பதாகை வெளியாகி உள்ளது. இந்த பதாகையில் நடிகர் அருள்நிதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>