ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “ஈரானுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் நேரடியாக வலியுறுத்தியிருந்த நிலையிலும், இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகளை இஸ்ரேல் தாக்கியதால் கோபம் அடைந்த ஈரான், அந்த நாட்டின் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. 10 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கிய நிலையில், அவற்றை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேலும் கூறியிருந்தது. தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு முதல் முறையாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனடியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினார். ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கூறினார். ஆனால், இந்த டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
டிரம்ப் எச்சரிக்கையை மீறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>