டிரம்ப் மிரட்டல் எதிரொலி: நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு செய்த மாற்றம்

Share

2026-27 மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஈரானில் உள்ள சபஹார் துறைமுகத் திட்டத்திற்கு மத்திய அரசு இந்த ஆண்டு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை. பாகிஸ்தானைத் தவிர்த்துவிட்டு ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய சபஹார் துறைமுகம் இந்தியாவிற்கு ஒரு முக்கிய நுழைவு வாயிலாக இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடி வீதம் இந்த மெகா திட்டத்திற்கு இந்தியா நிதி ஒதுக்கி வந்தது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. சபஹார் துறைமுகத் திட்டத்திற்காக அமெரிக்கா வழங்கியிருந்த பொருளாதாரத் தடை விலக்கு வரும் ஏப்ரல் 26 உடன் முடிவடைகிறது. இதனால் இந்தியா இத்திட்டத்தில் தனது செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளக்கூடும் என்று தெரிகிறது. மேலும் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள், அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த தாக்குதல் மிரட்டல் ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியா இத்திட்டத்திலிருந்து பின்வாங்கினால் சீனா இங்கு தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>