நாட்டின் 77-வது குடியரசு தின விழாவையொட்டி டில்லி கடமைப் பாதையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். குடியரசு தலைவர் கொடியேற்றியதும் விமானப்படை வானில் ஹெலிகாப்டர்களில் மலர்கள் தூவப்பட்டன. அப்போது, சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இந்திய வீரரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். அதனைத் தொடர்ந்து இந்தியாவின் படை வலிமை, பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பு நடந்தது. லெப்டினென்ட் ஜெனரல் பாவ்னீஷ் குமார் தலைமையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விமானப்படை சார்பில் 29 விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் ஆண்டோனியோ லுயிஸ் சாண்டோஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை கண்டுகளித்தனர். அதேபோல, பிரதமர் மோடி, துணை அதிபர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
டில்லியில் தேசியக்கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>