டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்தாண்டு ஐடெண்டிட்டி, நரிவேட்டை மற்றும் லோகா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து டொவினோ தாமஸ், மலையாள இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பள்ளிச்சட்டம்பி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.. இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார். மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் கெடமங்களம், பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1950 காலத்தில் நடைபெறும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த முன்னோட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ பட முன்னோட்டம் வெளியானது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>