‘டோரதி’ திரைப்படம் உலகளவில் பேசப்படும் ஒரு படமாக இருக்குமென நம்புவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘டோரதி’ திரைப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1990-களில் நடக்கும் கதையாக உருவான இதில் நட்பு, காதலுடன் அழுத்தமான படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தின், பிரீ வெளியீடு நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், “டோரதி திரைப்படத்தின் கதையைப் படித்ததும் உடனே ஒத்துக்கொண்டேன். ஏனெனில், இது போன்ற படத்தில் நடிப்பது எனக்குதான் பெருமை. சில நாள்கள் வேலை செய்தாலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். இளையராஜா சார் இசையில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே சிறப்பாக உழைத்திருக்கிறார்கள் ரிஷி, சனந்த் இருவருடனும் கொஞ்ச நாள்களே பணிபுரிந்திருந்தாலும் அவர்களுடன் நல்ல நட்புறவு உருவாகியிருக்கிறது. செப்டம்பர் 25 அன்று இப்படம் வெளியாகிறது. நிச்சயம் உலகளவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
“டோரதி” உலகளவில் பேசப்படும் ஒரு படமாக இருக்குமென நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>