இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ட்ரோன்ஸ்’ படம் அக்டோபர் 16ல் வெளியாகுமென படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ராகவ் மிர்தாத் இயக்கம் இப்படத்தில் சித்தி இத்னானி மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து திராவிட் செல்வம், தேவதர்ஷினி, குரேஷி, ‘சினிமாவாலா’ சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், ‘சினிமாவாலா’ சதீஷ் இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளார். இப்படத்தை ஜி.எம். மார்கன் பிலிம்ஸ் பேனரின் கீழ் ஜி.எம். மார்கன் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஹரி எஸ்.ஆர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவனும், படத்தொகுப்பு (எடிட்டிங்) சதீஷ் சூர்யா, கலை இயக்கம் (ஆர்ட்) ஆர். கிஷோர் மற்றும் சண்டைப்பயிற்சியை பிசி ஸ்டண்ட்ஸ் ஆகியோரும் கையாண்டுள்ளனர். மேலும், வித்தியாசமான ஒரு கதைக்களத்தை கொண்டுள்ள இப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
‘ட்ரோன்ஸ்’ திரைப்படம் அக்டோபர் 16 -ல் வெளியாகிறது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>