தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை நடிகர் ரஜினி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்

Share

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உள்பட மூன்று பதக்கங்களை வென்ற வித்யா ராம்ராஜை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். ஜப்பானில் நடந்து முடிந்த 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மகளிருக்​கான 400 மீட்​டர் தொடர் ஓட்​டப் போட்​டி​யின் இறு​திச் ​சுற்​றின் இறு​திப் பகுதி​யில் அபார​மாக ஓடி தங்​கம் வென்று, இந்​தி​யா​வின் கனவை நனவாக்​கி​னார். அதேபோல் கலப்பு 400 மீட்​டர் தொடர் ஓட்​டப் போட்​டி​யில் வெள்​ளிப் பதக்​கம் வென்​றிருந்தவர், 400 மீட்​டர் தடை ஓட்டத்​தில் 54.75 விநாடிகளில் இலக்​கைக் கடந்து வெண்கலம் வென்​றதுடன், ஜாம்ப​வான் பி.டி. உஷா​வின் 42 ஆண்​டு​கால தேசிய சாதனையை முறியடித்திருந்தார். இவர் கடந்த அக்டோபர் 3-ம் தேதி சொந்த ஊரான கோவைக்கு திரும்பினார். ஆசிய விளையாட்டு போட்டியில் சாதனை படைத்து திரும்பி இருக்கும் தடகள வீராங்கனை வித்யாவை அரசியல் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வித்யா ராம்ராஜை நேரில் வரவழைத்த நடிகர் ரஜினிகாந்த் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>