தந்தை செல்வாநாயகம் அவர்களின் 125 ஆவது ஜனன தினம்!

Exif_JPEG_420

Share

தந்தை செல்வாநாயகம் அவர்களின் 125 ஆவது ஜனன தினம் நேற்று 18/11/2023 காலை 10:30 மணியளவொல் ஹட்டன் பழைய கிருஸ்ண பவன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் மலையக உரிமைக்காக போராடியவர்களுக்காக ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு மலையகத்திற்க்காக முதன்மை குரல் எழுப்பிய தந்தை செல்வநாயகம் அவர்களின் 125 ஆவது நினைவு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

வரவேற்பு உரை, தலைமை உரை என்பவற்றை தொடர்ந்து நினைவுரைகளை தந்தை செல்வா அவர்களது பேரனார் சா.செ.ச இளங்கோ, மலையக பேராசிரியர் விஜயசந்திரன், மலையக மக்கள் முன்னணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், வடக்கு கிழக்கும் மலையகமும் எனும் தலைப்பில் அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி கனகராஜ் சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான இரா.சுப்பிரமணியம், மலையகமும் பெண்களும் எனும் தலைப்பில் திருமதி ஜீவா சதாசிவம் ஆகியோர் நினைவு பேருரைகளை நிகழ்த்தினர்.

இதில் மலையக தொழில் சங்கவாதிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரதிகள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>