தனுசுக்கு ஜோடியாகும் சாரா அர்ஜூன்

Share

தனுஷ் தனது 56-வது படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க இருந்தார். தேதி பிரச்சனை காரணமாக ருக்மினி படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ‘துரந்தர்’ படத்தின் கதாநாயகியான சாரா அர்ஜூன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜூன் சைவம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க தொடங்கிய சாரா அர்ஜூன், ரன்வீர்சிங்குடன் ‘துரந்தர்’ படத்தில் நடித்தார். படம் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியடைந்ததையொட்டி சாரா சர்வதேச அளவில் பிரபலமடைந்தார். தற்போது தனுசுடன் அவர் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>