தனுஷ் நடித்த “கர” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்

Share

போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இந்த படத்திலிருந்து முதல்காட்சி பதாகை மற்றும் தலைப்பு காணொளி ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. சமீபத்தில் ‘கர’ படத்தின் கதாபாத்திர அறிமுக காணொளி வெளியானது. முன்னதாக, நடிகை மமிதா பைஜு, கேஎஸ் ரவிகுமார், சூரஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், ஜெயராம், பிரித்வி பாண்டியராஜன் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக பதாகைகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. தனுஷின் ‘கர’ படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், தணிக்கை வாரியம் ‘கர’ படத்திற்கு ‘யு/ஏ. சான்றிதழ் வழங்கியுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>