போர் தொழில்’ பட இயக்குனர் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘டி54’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார், பிருத்வி பாண்டியராஜன், குஷ்மிதா மற்றும் நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் பிரமாண்டமான பொருட்செலவில், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தை வருகிற பிப்ரவரி மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘டி54’ படத்தின் முக்கிய அப்டேட் பொங்கல் பண்டிகையையொட்டி காலை 10.50 மணிக்கு வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனம் பதாகை வெளியிட்டு அறிவித்துள்ளது.
“தனுஷ் 54” படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>