தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி பூசலே முட்டுக்கட்டையென ராகுல் காந்தி கூறினார்

Share

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உட்கட்சி பூசலே முட்டுக்கட்டையாக உள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் நிறைவு நாளான இன்று ராகுல் காந்தி பங்கேற்று, மாவட்டத் தலைவர்களிடம் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார். அதனை தொடர்ந்து, மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது: உட்கட்சி பூசல் மற்றும் பல அணிகளாக செயல்படுவதே தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை டெல்லியில் இருந்து கண்காணித்து வருகிறோம். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் தலைமையின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும். கட்சிக்கு விஸ்வாசமாக செயல்படுபவர்களுக்கு மட்டுமே எதிர்காலத்தில் வாய்ப்புகள் வழங்கப்படும். தவறு செய்பவர்கள் கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்லாத தலைவர்களுக்கு காங்கிரஸ் சில் இனி இடமில்லை. இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் இணைத்து, காங்கிரஸின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>