தமிழக அமைச்சரின் மகள் இமயா நடிகையாக அறிமுகம்

Share

அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘ஹார்டின்’. கிஷோர் குறும் படங்கள், வெப் தொடர்கள் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக சனந்த் நடிக்கிறார். இவர் ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ளார்.நாயகிகளாக மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் இமயா தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள். இவர் இப்படம் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதுகுறித்து இயக்குனர் கிஷோர் குமார் “ஆடிஷன் மூலம்தான் இமயாவை தேர்வு செய்தோம். தேர்விற்கு பிறகுதான் அவர் அமைச்சர் மகள் என்பதே எங்களுக்குத் தெரியும். இமயாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்காக அவர் தன்னை தயார்படுத்தியிருக்கிறார். முதல் படமே அவருக்கு பீல்குட் படமாக அமைந்திருக்கிறது. அவர் நடித்துள்ள சாதனா என்ற கேரக்டர் பேசப்படுவதாக இருக்கும். இமயா திரைக்கதை நுட்பங்களைப் பாடமாக எடுத்து நியூயார்க்கில் படித்துவிட்டு வந்திருக்கிறார். அதனால் இதன் திரைக்கதையில் அவருடைய பங்களிப்பும் இருக்கிறது. அவரே நடிக்கவும் செய்வதால் கேரக்டரை முழுமையாக உணர்ந்து நடித்துள்ளார். இந்த படம் இரண்டு பெண்களின் பார்வையில் சொல்லப்படும் கதையை கொண்டது” என்கிறார் இயக்குனர். ‘ஹார்ட்டின்’ படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>