தமிழக மீனவர்களிடமிருந்து ‘கொள்ளையிட்ட பொருட்கள்’ பொலிசாரிடம் ஒப்படைப்பு

Share

நடராசா லோகதயாளன்

இந்திய மீனவர்களிடம் கொள்ளையிட்ட பொருள்களை பருத்தித்துறை மீனவர்கள் தமது உடமையில் வைத்திருந்த்தாக தெரிவித்து மீனவ சங்கம் அவற்றை பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்திய மீனவர்களிடம் நடுக் கடலில் வைத்து கொள்ளையிட்ட பொருளகளை பருத்தித்துறையைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் தமது உடமையில் வைத்திருந்த்தாக தெரிவித்து மீனவ சங்கம் அவற்றை பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு இந்திய மீனவர்களிடம் கொள்ளையிட்ட பொருள்கள் என உறுதி செய்வதில் உள்ள சட்ட நெருக்கடிகள் மற்றும் இவற்றை உடமையில் வைத்திருந்த கொட்டடி மீனவர்கள் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய மீனவர்களை நடுக்கடலில் தாக்கி பொருள்கள் கொள்ளையிடப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச் சாட்டுகள் வெளிவருவதும் குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>