அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் மன்சூர் அலிகான் தமிழக வெற்றி கழக கட்சியில் இணைந்தார். பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்தில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடந்தது. தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து அரசியல் பயணத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: “50 ஆண்டுகள் பழமைவாதியான செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமையின் தவறு. வந்தால் பதவி தருவோம் என கூறி வியாபாரம் செய்யும் கட்சி தமிழக வெற்றி கழகம் இல்லை. அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்துவிட்டனர். அதனால் தான் அதிமுகவினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைகின்றனர். அதிமுகவின் 90 சதவிகித தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தை நோக்கி வர ஆரம்பித்துவிட்டனர். அதிமுகவும், தமிழக வெற்றி கழகமும் எப்போதும் ஒன்று தான். இரு கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான்” என்று பேசினார்.
தமிழக வெற்றி கழகத்தில் மன்சூர் அலிகான் இணைந்தார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>