தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல்!

Share

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 7ம் திகதி திங்கட்கிழமையன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தாக நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் “சைக்கில்” சின்னத்தால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>