தமிழ்நாடு பிள்ளையார்பட்டி கி. பிச்சைக்குருக்கள் அவர்களுக்கு கனடா துர்கேஸ்வரம் ஆலயத்தால் வழங்கப்பெற்ற ‘சைவப் பேரரசர்’ கௌரவ விருது

Share

கடந்த வாரம் நடைபெற்ற கனடா துர்க்கேஸ்வரம் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழாவை தலைமை சிவாச்சாரியப் பெருமகனாக இருந்து சிறப்பாக நடத்திய தமிழ்நாடு பிள்ளையார்பட்டி டாக்டர் கி. பிச்சைக்குருக்கள் அவர்களுக்கு துர்கேஸ்வரம் ஆலய நிர்வாகத்தால் ‘சைவப் பேரரசர்’ என்னும் கௌரவ விருது வழங்கப்பெற்றது.

நூற்றுக் கணக்கான அடியார்கள் கலந்து சிறப்பித்த இந்த வைபவத்தில் கனடா துர்க்கேஸ்வரம் ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ கணேச சுவாமிகள் தியாகராஜக் குருக்கள் அவரது பாரியார் மற்றும் குடும்பத்தினர் மற்றும் உபயகாரர்கள் ஆகியோர் சூழ்ந்து நிற்க இந்த உயர் கௌரவம் வழங்கப்பெற்றது

(செய்தி சத்தியன் படம் ஐயா 4 யு)

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>