தமிழ்நாடு மற்றும் பிறநாடுகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பெற்ற சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கிக் கொளரவித்த திருச்சி நந்தவனம் பவுண்டேசன்!

Share

இவர்களுள் அண்மையில் விஜேய் தொலைகாட்சி ‘சுப்பர் சிங்கர்’ பாடல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான ஈழத் தமிழ் மகள் டிசாதனா என்னும் வெற்றியாளரும் அடங்குகின்றார்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த பத்தாண்டுகளாக உலகில் பலதுறைகளில் சாதித்து வரும் தமிழ்ப் பெண்களை அடையாளம் கண்டு தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து இயங்கிவரும் நந்தவனம் பவுண்டேசன் ஊடாக விருது வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றனர்

நந்தவனம் சந்திரசேகரன் தலைவராகவும், தொழிலதிபர் எம்.சாதிச்பாட்சா செயலாளராகவும், பள்ளி ஆசிரியரும் கவிஞருமான பா.தென்றல் பொருளாளராகவும் பொறுப்பு வகிக்கும் நந்தவனம் பவுண்டேன் நடத்தும் 2026 ஆண்டுக்கான சாதனைப் பெண்கள் விரும் வழங்கும் விழா மார் மாதம் 8ம் திகதி அன்று சென்னையில் ஹோட்டல் விஜய்பார்க்கில் சிறப்பாக நடைபெற்றது

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, , சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் சாதனைப் பெண்கள் தெர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பெற்றன.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ரொட்டேரியன் டாக்டர் கே. சீனிவாசன், முனைவர், லேனா தமிழ்வாணன், பப்ளிக் ரிலேசன் ஆஃப் கவுன்சில் தலைவர் கிதா சங்கர், மற்றும்இவ்வமைப்பைச் சேர்ந்த எம்.பி. ஜெயராம், ஹச்.எல். ராமகிருஷ்ணா, ஜெ.எஸ். சுப்பிரமணியன், சுவிட்சர்லாந்த் சமூக செயற்பாட்டாளர் சுரேஷ் செல்வரட்ணம், தங்கமயில்ஜீவல்லரி, முதன்மை விற்பனை மேலாளரும் மக்கள் தொடர்பாளருமான் ரொட்டேரியன் விஸ்வநாராயன், வாக்கறிஞர்,டாக்டர் ஸ்ரீவித்யா சுகுமார், திரைப்பட இயக்குநர் தினேஷ் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு விருதுகள் வழங்கிச் சிறப்பித்தனர்

நந்தவனம் பவுண்டேசன் சாதனைப் பெண்கள் 2026க்கான விருதினை டாக்டர் லட்சுமிபிரியா, (திருச்சி) அஞ்சலை நடராஜன் (சென்னை) மான்விழி (ஈரோடு ), நதியாவெங்கட் (சென்னை), விஜயலட்சுமி (திருச்சி) தினுசா காயத்ரி (இலங்கை) நிர்மலா மேகந்திரன் (இலங்கை) டி சாதனா ( பரமத்தி) உமா அபர்னா (திருச்சி) ராதாகோபாலன் ( திருச்சி) மாரீஸ்வரி( மதுரை) திலகவதி (ஓசூர் ) ஸ்ரீபிரியாராஜகோபால் (சென்னை) குப்புலட்சுமி ( கரூர்) மோனிஷா (சென்னை) இஸ்மாத் பானு (சென்னை) பாரதி பத்மாவதி பிரவீன் (சென்னை) ரசிதா பர்வின் (மயிலாடுதுறை)
ஜெயஸ்ரீ சுருதி (பெங்களூர்)ஆகியோர் விருது பெற்றனர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>