பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அத்தொகுதி எம்.எல்.ஏ. ஜெயராமன் பங்கேற்று பேசியதாவது: “தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள், கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலை ஏற்றம், சட்டம், ஒழுங்கு பாதிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 அமாவாசைகளுக்கு பிறகு அதாவது 60 நாட்கள் கழித்து தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி அமையும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவியேற்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அ.தி.மு.க ஆட்சி அமையும். சாதாரண மக்களிடமும் எளிமையாக பழகும் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க பொதுமக்கள் முடிவெடுத்துவிட்டனர். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். எடப்பாடியாரின் எக்ஸ்பிரஸ் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி’ – பொள்ளாச்சி ஜெயராமன்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>