தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 865 கோடியைத் தாண்டியது
- அஸ்சாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் மார்ச் 15, 2026 அன்று அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகளை கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய மாநில/யூனியன் பிரதேச அரசாங்கங்களுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் எல்லை மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், டிஜிபிக்கள் மற்றும் அமலாக்க முகமைகளின் தலைவர்களுடன் ஆணையம் பலமுறை ஆய்வுக் கூட்டங்களை நடத்தியது. வன்முறையற்ற, மிரட்டல்களற்ற மற்றும் தூண்டுதல்களற்ற தேர்தல்களை உறுதி செய்ய அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
- இதனை உறுதி செய்வதற்காக, புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய இரு மாநிலங்களிலும் 5,011-க்கும் மேற்பட்ட (மேற்கு வங்கத்தில் 2,728 மற்றும் தமிழ்நாட்டில் 2,283) பறக்கும் படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளன. இது தவிர, வெவ்வேறு இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ள 5,363-க்கும் மேற்பட்ட (மேற்கு வங்கத்தில் 3,142 மற்றும் தமிழ்நாட்டில் 2,221) நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.
- 2026 பிப்ரவரி 26 அன்று தேர்தல் பறிமுதல் மேலாண்மை அமைப்பு செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து, 2026 ஏப்ரல் 17 வரையிலான தரவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>