தமிழ்நாட்டில் 30 தொகுதிகளில் இந்திய குடியரசு கட்சி போட்டி – ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே அறிவிப்பு

Share

தமிழ்நாட்டில் 25 முதல் 30 தொகுதிகளில் இந்திய குடியரசு கட்சி(அ) போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. அசாம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாக ஏப்ரல் மாதம் 23ம் தேதியும் ஏப்ரல் மாதம் 29ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், இந்திய குடியரசு கட்சி (அ) தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ராம்தாஸ் அதவாலே நாக்பூரில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: எங்கள் கட்சிக்கு தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் ஆதரவு உள்ளது. தமிழ்நாட்டில் 20 முதல் 30 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம். அசாமில் 15 முதல் 20 தொகுதிகளிலும், கேரளாவில் 8 முதல் 10 தொகுதிகளிலும் போட்டியிடுவோம், என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>