தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

Share

தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

     உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டிமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- உலகச் செயல்முறை மருத்துவ நாளில், மாண்புடனும் சுதந்திரமாகவும் மக்கள் செயல்பட உதவும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். நமது திராவிட மாடல் அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ – ஒருங்கிணைந்த சேவை மையம், ஆட்டிசம் பாதித்தோருக்கான சிறப்புத் திறன் மையம் ஆகியவற்றைத் தொடங்கி இந்தச் செயல்பாடுகளை மேம்படுத்தி வருகிறது. அக்கறை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, ஒவ்வொரு தனிநபருக்கும் வாய்ப்பு கொண்ட தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>