(13-11-2021)
சிறிலங்கா சிறைகளில் நீண்ட காலமாக இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தனக்கு அனுப்பிவைக்குமாறு ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினரான ஐயம்பிள்ளை தயானந்தராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை தன்னுடைய பிரத்தியேக தொலைபேசி இலக்கமான 0766034900 இனைத் தொடர்புகொண்டு வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியானது பொதுமக்களின் கருத்துக்களைப் பெற ஆரம்பித்துள்ள நிலையில், பேராசிரியர் ஐயம்பிள்ளை தயானந்தராஜா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>