தமிழ் நாடு தனுஸ்கோடியிலிருந்து பாக்கு நீரிணையை நீந்தி தலைமன்னார் வந்ததடைந்த சாதனை 13 வயது கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன்

Share

(மன்னார் நிருபர்)

(1-03-2024)

போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி திருகோணமலையைச்சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவன் பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இவர் தமிழ் நாடு தனுஸ்கோடியிலிருந்து இன்று(01-03-2024) வெள்ளிக்கிழமை அதிகாலை நீந்த ஆரம்பித்து தலைமன்னார் வரை நீந்திக் கடந்துள்ளார்.

குறித்த சிறுவனை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதுவர் தலைமன்னாரிற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர் சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை 8 மணித்தியாலம் 15 நிமிடங்களில் நீந்திக்கடந்துள்ளார்.

குறித்த மாணவன் திருகோணமலை மாவட்டத்தில் தி.இ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் கல்வி கற்று வருகின்றார்..

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>