தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை

Share

(மன்னார் நிருபர்)

(20-12-2023)

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை(20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.

கைதான 8 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த மீனவர்கள் இன்று (20) புதன்கிழமை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் ‘ நிபந்தனையின் கீழ் அவர்களை விடுதலை செய்தார்.

இதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்தியத் துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>