தலைமன்னார் , பேசாலை கடற்கரையில் இருந்து படகு மூலம் கச்சைதீவு நோக்கி பயணித்த பக்தர்கள்

Share

(மன்னார் நிருபர்)

3-03-2023)

தலைமன்னார் மற்றும் பேசாலை கடற்பரப்பில் இருந்து இன்று (3) காலை கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு பக்தர்கள் படகுகள் மூலம் பயணித்துள்ளனர்.

தலைமன்னார் மற்றும் பேசாலை கடல் கரை பகுதியில் மக்கள் இன்று வெள்ளிக்கிழமை (3) காலை முதல் காத்திருந்திருந்து கடற்படையினரின் அனுமதியுடன் சென்றுள்ளனர்.

இன்று வெள்ளி மற்றும் நாளை சனி ஆகிய இரு தினங்கள் கச்ச தீவு திருவிழா இடம்பெற்று வரும் நிலையிலேயே மனார் மாவட்டம் தலை மன்னார் கடற் பரப்பிலிருந்து பக்தர்கள் படகு மூலம் பயணித்துள்ளனர்.

இன்று மற்றும் நாளைய தினங்களில் திருவிழா இடம் பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>