தான்சானியாவில் லோரி மீது பேருந்து மோதி கோர விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தான்சானியா. இந்நாட்டின் தலைநகர் டர் எஸ் சலாம் நகரில் இருந்து எம்பெயா நகருக்கு அதிகாலை பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மொரோகொரோ – டர் எஸ் சலாம் தேசிய நெடுஞ்சாலையில் எம்பரானி என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வந்த லோரி மீது பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 28 பேர் தீயில் உடல் கருதி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேவேளை, இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
தான்சானியாவில் லோரி மீது பேருந்து மோதி கோர விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>