தாய் கிழவி முன்னோட்டம்… புது பதிவேற்றம் கொடுத்த படக்குழு

Share

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளப் படம் தாய் கிழவி. ராதிகாவை மையக் கதாபாத்திரமாக கொண்டு நகைச்சுவை பாணியில் படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்தியேன் மற்றும் பேஸன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் முதல்பாடலை பாடியுள்ளார். படம் வருகிற 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த பதிவேற்றங்கள் தொடர்ந்து வெளியாகும் என்று தெரிகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>