தாவடியில் 8 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

Share

நேற்றையதினம் 22-12-2023 சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில் வைத்து ஹெரோயினுடன் 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரது உடமையில் இருந்து 8 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

பொலிஸாரை கண்டதும் குறித்த நபர் தப்பித்து ஓட முயற்சிக்கும் போது சுன்னாக பொலிஸார் சந்தேகபரை மடக்கி பிடித்தனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>