தாவரங்களை அடையாளம் காணுகின்ற தாவராவதானி போட்டி

Share

வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்  தேசிய பசுமை இயக்கம் நடாத்தும்  தாவரங்களை அடையாளம் காணுகின்ற தாவராவதானி போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை [ 26 – 11 – 2024 ] நல்லூர்   திவ்ஜ ஜீவன  சங்க மண்டபத்தில் காலை 11  மணிக்கு நடை பெற உள்ளது.

இயற்கை எனது நண்பன்   என்ற பிரசித்தமான மேற்கோளுக்கு அமைவாக தாவரங்களை அடையாளம் காண்பதன் மூலம் தாவரங்களையும் இயற்கையையும் நேசிக்கக் கற்றுத்தருவதை நோக்காகக் கொண்டு இப்போட்டி ஒழுங்கமைக்கப்படுள்ளது

தமிழ்த் தேசியபசுமை இயக்கத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் இப்போட்டியில் பால்  , வயது வேறுபாடின்றி எவரும் பங்கு கொள்ளலாம்முன் பதிவு இல்லாமல் இப்போட்டியில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியும்.

வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ்களோடு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.. இவ்வாறு தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>