திசை மாறிப் போகும் யாழ்ப்பாண மண்!

Share

யாழ்ப்பாணத்தில் ‘மின்சார உற்பத்திக்கு’ பெயர் பெற்ற சுன்னாகத்தில் போதைவஸ்துகளுடன் பலர் கைது!

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 28ம் திகதியும் 29ம் திகதியும் சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின்போது எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் போதை மாத்திரைகளுடனும், இருவர் ஐஸ் போதைப்பொருளுடனும், இருவர் ஹெரோயின் போதைப் பொருளாடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் 3 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் ஏற்கனவே 8 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களகடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>