திடீர் வெள்ளத்தில் சிக்கி 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயமானதாக நேபாள வெளியுறவு அமைச்சர் கூறினார்

Share

திடீர் வெள்ளத்தில் சிக்கி 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயமானதாக நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் கூறினார். நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் சுமார் 300 இந்திய சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஏற்பட்ட இந்தத் திடீர் வெள்ளம் நேபாளத்தின் மூன்று மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வெள்ளத்தில் காணாமல் போன ஆயிரக்கணக்கானோரில் சுமார் 300 இந்தியர்களும் அடங்குவர் என்று நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் கூறினார். மேலும், ராசுவா பகுதியில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன; பெரும்பாலானோர் காணாமல் போயுள்ளனர். பேரிடரின் முழு அளவை நாங்கள் இன்னும் கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார். நேற்று மூன்று மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போட்டேகோஷி நதி வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பனிச்சரிவு காரணமாக போட்டேகோஷி நதியின் கிளை நதியான லெண்டேவின் நீரோட்டம் தடைபட்டதால் இந்தத் திடீர் வெள்ளம் ஏற்பட்டது; இது முதலில் சீனாவுடனான நேபாள எல்லையான ராசுவாகதிக்கு அருகிலுள்ள டிமுரே பகுதியைத் தாக்கியது. காணாமல் போன சுமார் 500 பேரில் குறைந்தது 133 இந்தியர்களும் 37 வெளிநாடு வாழ் இந்தியர்களும் அடங்குவர் என்று தகவல் வெளியானது. காணாமல் போன இந்தியர்களில் குறைந்தது 50 பேர் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காகச் சென்றவர்கள் ஆவர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>