திபெத் பகுதியில் மீண்டும் ஓர் அணை உடைந்துள்ளதாக நேபாள காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் கடந்த புதன்கிழமை புகுந்து பேரழிவை விளைவித்தது. திபெத்தையொட்டிய ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் முதலில் பெருக்கெடுத்த வெள்ளம், பின்னர் திரிசூலி, நாராயணி ஆறுகளிலும் பாய்ந்ததால், நுவாகோட், தாடிங் உள்பட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. பலத்த உயிர்ச் சேதம் மற்றும் பொருட்சேதத்துடன், நேபாளம் வரலாறு காணாத மிக இயற்கை பேரழிவை சந்தித்தது. வெள்ளத்தால் புரட்டிபோடப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் நேபாள ராணுவம் மற்றும் பிற முகமையினர் மூன்றாவது நாளாக இன்று மீட்புப் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 500 சடலங்களை மீட்புப் படையினர் மீட்டுள்ள நிலையில், காணாமல் போன ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், திபெத் பகுதியிலிருக்கும் நீர்த்தேக்க அணை உடைந்துள்ளதாக நேபாள காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோஷி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு நேபாள காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
திபெத் பகுதியில் நீர்த்தேக்க அணை உடைந்துள்ளதாக நேபாள காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>