தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவு ஊர்திக்கு வடமராட்சியில் மக்கள் அஞ்சலி!

Share

ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் அவர்களது ஊர்திக்கு நேற்றிரவு வடமராட்சி – நெல்லியடி, பருத்தித்துறை பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

23-09-2023 அன் று பிற்பகல் வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியல் இருந்து ஆரம்பித்த தியாக தீபம் திலீபன் அவர்களது ஊர்தி வலம் பிற்பகல் 6:30 மணியளவில் நெல்லியடியை வந்தடைந்தது, தொடர்ந்து பருத்தித்துறை ஊடாக இன்பருட்டிக்குச் சென்றது.

நெல்லியடி, பருத்தித்திறை பகுதியில் மக்கள் மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து இன்பருட்டியில் விசேடமாக அமைக்கப்பட்ட பந்தலில் மக்கள் திரண்டு அஞசலி செலுத்தினர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>