திருகோணமலை சீனக்குடா விமானப்படைத்தளத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!

Share

பு.கஜிந்தன்

திருகோணமலை சீனக்குடா விமானப்படைத்தளத்தில் பயிற்சி விமானம் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் இரு விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் HMTK. ஹேரத் (வயது 25), KMPM. வர்ணசூரிய (வயது 40) ஆகிய இரண்டு விமானப்படை வீரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்போது குறித்த விமானம் சேதமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>