திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டி?.

Share

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து மாபெரும் வெற்றியை பெற்றது. ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க. எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டது. அ.தி.மு.க. மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதமும் குறைந்தது. முதலமைச்சராக இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அங்கு த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றிபெற்றார். இது தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பை அளித்தனர். மேலும் உணர்ச்சிவசப்பட்டு பலரும் கண்ணீர் வடித்தனர். நடைபெற்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றிக்கொடி நாட்டினார். தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களின் அனுதாப அலையில் வெற்றி பெற்று விடலாம் என கருதுவதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியை த.வெ.க. தலைவர் விஜய் ராஜினாமா செய்யும் நிலையில் மு.க.ஸ்டாலின் போட்டி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக திருச்சியில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதேபோல் த.வெ.க. சார்பில் நடந்த முடிந்த தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் களம் இறக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயத்தை த.வெ.க. சார்பில் போட்டியிட வைக்கவும் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக த.வெ.க. மூத்த நிர்வாகிகள் தலைவர் விஜய்யிடம் எடுத்துக்கூறி இருக்கிறார்கள். கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தனித்துறை உருவாக்கி, அதன் பொறுப்பை சகாயத்திடம் வழங்கலாம் என்பதே கட்சியினரின் யோசனையாக உள்ளது. மேலும், இங்குத் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் ஒரு கிறிஸ்தவர் என்பதால், அதே சமூகத்தைச் சேர்ந்த சகாயத்தை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜினாமா செய்யும் பட்சத்தில் இந்த தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>