திருட்டு போன நீர் இறைக்கும் மோட்டார்களுடன் சந்தேகநபர் கைது!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் நெல்லியடியில் நீர் இறைக்கும் மோட்டார்கள் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 5 தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிசார் தெரிவித்தனர்.

துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நெல்லியடிப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

குறித்த நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>