திருப்பதியில் திரிஷா சாமி தரிசனம்

Share

திருப்பதியில் நடிகை திரிஷா அதிகாலை சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். நடிகை திரிஷா தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், திருமலை ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் ஈடுபட்டார். அப்போது, ‘இன்று ரிசல்ட் பக்காவா நம்ம பக்கம்தான்’ என்று ரசிகர் ஒருவர் திரிஷாவைப் பார்த்து கூறிய நிலையில், அவர் சிரித்த முகத்துடன் நடந்து சென்றார்.

திரிஷாவுக்கு இன்று பிறந்த நாள் ஆகும். அவர் தனது 42 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். திரிஷாவின் பிறந்த நாளுக்கு அவருக்கு திரைபிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகூறி வருகிறார்கள். சூர்யாவுடன் அவர் இணைந்து நடித்த கருப்பு படம் வரும் மே 14 அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>