திருவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பெற்ற பாஜக . கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

Share

கேரளத்தில் யுடிஎப் மற்றும் எல்டிஎப் ஆகிய கட்சிகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்று மோடி தெரிவித்துள்ளார்.

      கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக பாஜக வென்றுள்ளது. இதற்காக கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; “கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கு எனது நன்றிய தெரிவித்துக்கொள்கிறேன். கேரளத்தில் யுடிஎப் மற்றும் எல்டிஎப் ஆகிய கட்சிகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். எனவே, நல்லாட்சியை வழங்கவும், அனைவருக்கும் வாய்ப்புகளைக் கொண்ட கேரளத்தை உருவாக்கவும் ஒரே வழி தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே என்று மக்கள் தீர்மானித்தனர்.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக – தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம். மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். திருவனந்தபுரத்தின் வளர்ச்சியை நோக்கி எங்கள் கட்சி பாடுபட்டு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்க ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>