திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் சேரன் வெற்றி பெற்றுள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் 2026-2029 ஆம் ஆண்டிற்கான வாக்குப்பதிவு சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு இயக்குநர் சேரன் தலைமையிலான ‘நம்ம கே. பாக்யராஜ்’ அணியும், இயக்குநர் வி.சி. குகநாதன் தலைமையிலான ‘திரைக்கதை மன்னன் பாக்யராஜ்’ அணியும் போட்டியிட்டன. பொதுச்செயலாளர் பதவிக்கு பட்டுக்கோட்டை பிரபாகரன், மனோஜ்குமார் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு ஆர். சுந்தர்ராஜன், லியாகத் அலிகான் ஆகியோரும் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தற்போது முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி இத்தேர்தலில் நம்ம.கே. பாக்யராஜ் அணி வெற்றிப் பெற்றுள்ளது. 12 தபால் ஓட்டுகள் உட்பட 279 வாக்குகள் பெற்று சேரன் தலைவர் ஆகிறார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>