காஜல் அகர்வால் புதிய படத்தில் நடித்துள்ளார். சாகர் பி.ஷிண்டே தயாரிப்பில் டி.கே.சேட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் முன்னணி நடிகரான ஸ்ரேயாஸ் தல்படே உடன் காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ளார். சமூக பிரச்சினையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் சாகர் பி.ஷிண்டே கூறும்போது, “நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கும்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>