தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது

Share

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28, தே.மு.தி.க.வுக்கு 10, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 5, ம.தி.மு.க.வுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒருசில சிறிய கட்சிகளுக்கும் தலா 1 தொகுதிகள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ள தி.மு.க.வில், தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது தற்போது அடையாளம் காணப்பட்டு வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறைந்தது 165 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக போட்டியிடும் என்றாலும், கூட்டணி கட்சிகள் சிலவும் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியனில் களம் இறங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, “பாபநாசம், மணப்பாறை, வாணியம்பாடி, திருச்சி கிழக்கு ஆகிய நான்கு விருப்பத் தொகுதிகளின் பட்டியலை அளித்துள்ளோம். அதில் இரண்டை எங்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டிருக்கிறோம் என்று கூறினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>