தி.மு.க. முப்பெரும் விழா செப்டம்பர் 15-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இதையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் பெறுவோர் பட்டியலை தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. பெரியார் விருது-கு.செல்லப்பா (விவசாய அணி துணை செயலாளர்), அண்ணா விருது-சேலம் ஜி.கே.சுபாஷ் (சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர்), கலைஞர் விருது-திருச்சி சிவா எம்.பி. (தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்), பாவேந்தர் விருது- கனிமொழி என்.வி.என்.சோமு (மருத்துவ அணி தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), பேராசிரியர் விருது- மிசா எஸ்.அகமது தம்பி (தலைமை செயற்குழு உறுப்பினர்), மு.க.ஸ்டாலின் விருது- நா.இளையராஜா (இளைஞர் அணி துணை செயலாளர்). இந்த விருதுகளை வருகிற 15-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>