சென்னை, ஆக. 25- தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் செப்டம்பர் 17-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அதில், முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது – கழக துணைப் பொதுச்செயலாளரும் -கழக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு வழங்கப்படும். அண்ணா விருது – தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும் பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப. சீத்தாராமனுக்கு வழங்கப்படும். கலைஞர் விருது – நூற்றாண்டு கண்டவரும் அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும் -அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா.இராமச்சந்திரனுக்கு வழங்கப்படும். பாவேந்தர் விருது – கழக மூத்த முன்னோடியும் – தலைமைச் செயற்குழு உறுப்பினரும் – குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமனுக்கு வழங்கப்படும். பேராசிரியர் விருது – கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும் – காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் – சட்டப்பேரவை முன்னாள் கொரடாவுமான மருதூர் இராமலிங்கத்துக்கு வழங்கப்படும். மு.க.ஸ்டாலின் விருது – ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும் – முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. முப்பெரும் விழா- பெரியார் விருதுக்கு எம்.பி. கனிமொழி தேர்வு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>