சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். கூட்டத்தில் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மு.பெ.சாமிநாதன் மற்றும் எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். இப்போது குணம் அடைந்து விட்டேன். இதனால் கட்சிப் பணியையும் தொடங்கிவிட்டேன். வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது – அமைச்சர் துரைமுருகன்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>