பு.கஜிந்தன்
தியாகி திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – வேலணை வங்களாவடிச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் நடைபெற்றன.
இதன்போது தியாக தீபம் திலீபனுக்கு பொதுச்சடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
திலீபன் நினைவாக அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>