“தீவகம் தன் வரலாற்றுக் கடமையில் ஒருபோதும் தவறாது” சிறீதரன்

Share

இனவிடுதலைப் போரியல் வரலாற்றிலும், அதன்பின்னரான தமிழ்த்தேசிய அரசியல் பரப்பிலும் தீவக மண்ணும், அதன் மக்களும் வழங்கிவரும் பங்களிப்பு மிகக் கனதியானது என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்துக்கான முதன்மை வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சிறீதரன், தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக 24-10-2024 அன்றைய தினம் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு, மக்களுடன் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தீவக மக்கள் தமிழ்த்தேசிய அரசியற் களத்தில் ஊறித் திளைத்தவர்கள். தமிழ்த்தேசியக் கொள்கையே அவர்களது மாறாத நிலைப்பாடு. எதிர்வரும் தேர்தலிலும் அந்தக் கொள்கைக்கான ஆணையாகவே அவர்கள் தமது வாக்குகளைப் பிரயோகிப்பார்கள். இந்த மண்ணும், மக்களும் ஒருபோதும் விலைபோகமாட்டார்கள்- என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>