அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் ஏர் கனடா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியது. தரையிறங்கும் போது ஏற்பட்ட கோளாறால், விமானம் ஓடுதளத்தில் இருந்த தீ அணைப்பு வாகனத்தின் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்தில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. விமானத்தில் இருந்த சில பயணிகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த உடனே அவசர மீட்பு குழுக்கள் விரைந்து வந்து உதவி பணிகளில் ஈடுபட்டன. தீ அணைப்பு படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தினால் லாகார்டியா விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. சில விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன், சில சேவைகள் மாற்று விமான நிலையங்களுக்கு மாற்றி இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
தீ அணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து: பயணிகள் காயம்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>