துனிசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு துனிசியா. இந்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் துனிஸ், சிட்டி எடுஹமன், சயாதின், எல் மவுரொஜி, கிரேட்டர் துனிஸ், சிலியானா உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின்சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>